வடிவமைப்புக் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் , 2026-ஆம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிர்வாகம், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்களையும், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வடிவமைப்பாளர்களையும் உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன், தகவல் தொடர்பு வடிவமைப்பு, தொழில்துறை வடிவமைப்பு, இன்டீரியர் வடிவமைப்பு, ஃபேஷன் வடிவமைப்பு ஆகிய துறைகளில் இளங்கலை படிப்புகளையும், தகவல் தொடர்பு வடிவமைப்பு மற்றும் தொழில்துறை வடிவமைப்பு ஆகிய துறைகளில் முதுகலைப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.
.

இதில் வரவேற்புரையாற்றிய முதல்வர் வைதியநாதன, டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன், புதிய மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வரவேற்றார். மாணவர்கள் ஒரு பட்டப்படிப்பைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல், ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் நோக்கமிக்க வாழ்நாள் பயணத்தைத் தொடங்குவதற்காகவே டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைனைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கல்வி நிறுவனத்தில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்தி, பொறுப்புணர்வும் சமூகப் பங்களிப்பும் கொண்ட வடிவமைப்பாளர்களாக வளர வேண்டும் என்று அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.





