• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குடிநீர் வழங்காததால் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்..,

ByP.Thangapandi

Jul 7, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திடீர் நகர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.,

இந்நிலையில் இக்கிராம மக்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது., இந்நிலையில் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.,

இந்நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீர்நகர் விலக்கில் மதுரை- தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.,

தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு தினங்களுக்குள் போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.,

இந்த சாலை மறியல் போராட்டத்தால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.,

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார்1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,