தமிழக வெற்றி கழக தலைவர், முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவரது படத்தை மாற்றி சித்தரித்து விமர்சனம் வெளியிட்டப்பட்டு இருந்தது.. இதுகுறித்து மதுக்கரையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் பாலாஜி என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் இது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது முகநூலில் அவதூறு பரப்பியவர் மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 36) மற்றும் அதே போதையைச் சேர்ந்த மனோஜ் குமார் (வயது 37) என்றும் தெரியவந்தது.

விஷ்ணு பிரபு சமையல் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். மனோஜ் குமார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இருவரும் தி.மு.க பிரமுகர்கள் என கூறப்படுகிறது.
அவர்களை போலீசார் கைது செய்தனர்.





