• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனைரூ.2.43லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, ஏட்டு புனிதா ஆகியோர் வாகன சோதனை செய்தனர்.

அப்போது கட்டக்குளம் பிரிவில் வெளிச்சநத்தத்தை சேர்ந்த மலையாண்டி என்பவர் ஓட்டி வந்த வேனை சோதனை செய்த போது அதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.1,43,500 பறிமுதல் செய்தனர். அதேபோல நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் சப்ன்ஸ்பெக்டர் ஆனந்தன், ஏட்டு மீனா ஆகியோர் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள திருமண மண்டப முன்பாக வாகன சோதனை செய்தபோது இரும்பாடியை சேர்ந்த மாடசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த பறிமுதல் செய்த ரூ.2லட்சத்து 43 ஆயிரத்து 500 வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல், உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்தி ரன்,மற்றும் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.