திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியரின் நாட்காட்டியில் 9-வது மாதத்தில் வருகிறது.

இம்மாதம் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் பூமிக்கு அருளிய மாதத்தை கன்னியப்படுத்தும் விதமாக ரம்ஜான் மாதம் பிறை தென்பட்டதும் முஸ்லீம்கள் நோன்பிருக்க தொடங்குவர். மாதம் முழுவதும் 30 நாட்கள் நோன்பிருந்து 30-வது நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மதினாபள்ளிவாசல், துல்கருணை சிக்கந்தர் நகர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல், ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த ஜமாத்தார்கள் நகர்பகுதியில் ஊர்வலமாக வந்து செக்போஸ்ட் பகுதியில் திடல் தொழுகை நடத்தினர்.
மேலும் தர்கா பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல் ,மற்றும், கொல்லபட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபடட்டி, விருப்பாட்சி, சாலைப்புதூர், ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து, வாசனை திரவியங்கள் பூசிக்கொண்டும், வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு குடும்பத்தினருடன் சலவாத்துக்கள் ஓதி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். படம் .திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு செக்போஸ்ட் பகுதியில் ஈதுகாமைதானத்தில் திடல் தொழுகை நடத்தினர்.




