• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

புனித ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் புனித ரமலான் பண்டிகையை ஒட்டி ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

ஜும்மா பள்ளியில் இருந்து பள்ளியின் இமாம் தலைமையில் ஊர்வலமாக கடைவீதி, ராஜ வீதி வழியாக இது ஈத்ஹா பள்ளிக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பள்ளியின் இமாம் மௌலவி ஹாஃபிழ் சதாம் உசேன் தலைமை ஏற்று தொழுகை நடத்தினார். விழாவில் திரளான இடையகோட்டை ஜமாத்தார்கள் கலந்துகொண்டு உலக அமைதிக்கும் மக்கள் அனைவரின் உடல் ஆரோக்கியம், பொருளாதார தேவைகளுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது முடிவில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனர்.

ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கருப்புசாமி ஜமாத்தார்கள் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கினார். ஏழை எளிய மக்களுக்கு சாதிமத வேறுபாடு இன்றி ஜமாத்தார்கள் சதக்கா எனப்படும் தர்மம் வழங்கி மகிழ்ந்தனர்