• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

AITUC தொழிற்சங்கத்துடன் இணைந்து நடத்தும் பட்டினி போராட்டம்..,

BySubeshchandrabose

Mar 20, 2026

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே கே பட்டியல் தமிழக அரசின் பொன்விழா மகளிர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சங்கத்திற்காக கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு நான்கே மாதங்கள் இயங்கிய நிலையில் அந்த கல்குவாரி அருகாமையில் நடந்த அசம்பாவித சம்பவத்தால் தற்போது கல்குவாரி நிறுத்தப்பட்டு மகளிர் சங்கத்தைச் சேர்ந்த மகளிர்கள்

வேலை வாய்ப்பு இன்றி தற்போது பரிதவித்து வருவதாகவும் கல்குவாரி உரிமம் பெறுவதற்காக நீண்ட காலம் கடும் போராட்டத்திற்கு பின்பு பெறப்பட்ட உரிமத்தை கடந்த ஆறு மாதமாக நிறுத்தி வைத்ததால் பெரும் பொருளாதார நஷ்டத்திலும் கடனிலும் மகளிர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் தத்தளித்து வருவதாகவும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் பரிதவித்து வருவதாகவும் கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாகும் வரை பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையிலும் தற்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மகளிர் சங்கத்தினர் AITUC தொழிற்சங்கத்துடன் இணைந்து நடத்தும் இந்த சாகும் வரை பட்டினி போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.