• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாக்களிக்கும் வகையில் வழங்கும் பணியினை ஆட்சியர் நேரில் ஆய்வு..,

BySubeshchandrabose

Mar 20, 2026

தேனி மாவட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று 12D படிவம் வழங்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் 85 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று 12 டி படிவம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார்

தேனி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேல் 6838 வாக்காளர்கள், நூறு வயதுக்கு மேல் 130 வாக்காளர்கள் மற்றும் 10,985 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இவர்களில் வாக்குச்சாவடிக்கு நேரில் வாக்களிக்க முடியாத வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தபால் வாக்கை பதிவு செய்யப்படுவதற்கான 12D படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது.