திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பேக்கரி டீக்கடை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக
காலி சிலிண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் செ.அரசு தலைமை வகித்தார்,தமிழக உழவர் இயக்க மாநில துணைச்செயலாளர் உலகநம்பி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பிரகாஷ்,தமிழர் ஆட்சிக்கழக மாவட்ட செயலாளர் பிரவின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் எப்ஸ்டீன் பைல்ஸை மூடி மறைக்க இஸ்ரேல்,அமெரிக்கா-ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக மோடி அரசு அமெரிக்காவிடம் அடிபணிந்து சாமானிய மக்களை பாதிக்கும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டு கொள்ளாத மோடியையும் ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



