• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சுதந்திரப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் சிலை திறப்பு..,

ByS.Ariyanayagam

Mar 15, 2026

திண்டுக்கல்லில் கோபால சமுத்திர கரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால்நாயக்கர் நினைவாக அவரின் வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

மேலும், அங்கு நடை பயிற்சி செய்யும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ்,துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், மாநகர திமுக பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.