திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராஜதானி கோட்டை மேல் பகுதியில் சிறு மலையில் உச்சியில் தீ பிடித்து எரிந்து கொண்டு வருகிறது. இதனால் சிறுமலையில் விலை உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் மூலிகைச் செடிகளும் அழிந்து வரும் ஆபத்தான நிலையில் ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அங்கு சிறுமலை வாழும் கடமான், காட்டெருமை, உடும்பு, பாம்பு மற்றும் பறவைகள் பெரிதும் பாதிப்பு ஏற்படும் அவலம் நிலை கானப்படுகிறது.

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே சிறுமலையில் தீ வைத்து விடுவது வழக்கமாக உள்ளது. மேலும் சிறுமலை 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சிறுமலை மளமள என தீ பிடித்து எரிந்து வருவதை பார்க்க முடிகிறது. வனத்துறை அதிகாரிகள் சரியாக கண்காணிப்பு ரோந்து பணிகள் ஈடுபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுமலை மலையில் தீ பற்ற வைக்கும் மர்ம நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் தீயினால் அழிக்கப்படுவதை வனத்துறை அதிகாரிகள் தடுத்து பாதுகாத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




