• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை..,

ByS.Ariyanayagam

Mar 11, 2026

திண்டுக்கல்லில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை புளியம்பட்டி பாளையம் கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு துவங்கிய மண் கொள்ளை எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் தற்போது குளத்தின் ஆழம் 70 அடி என்பது அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது.
.
வடுகம்பாடி புதுக்கோட்டை பாளையம் வடமதுரை தென்னம்பட்டி குளத்தூர் உள்ளிட்ட வேடசந்தூர் தொகுதி முழுவதும் இரவு பகலாக மண் கொள்ளை

அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் சட்டமன்ற உறுப்பினர் இடமும் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்காதால் பொதுமக்கள் அதிர்ச்சி

குளங்களில் அதிக அளவு மண் எடுத்ததால் தற்போது நிலத்தடி நீர் வெகுவாக கீழே சென்று விட்டதாகவும் விவசாயம் பாதிப்பதாகவும் அதே போல் குடிதண்ணீர்க்கே மிகப்பெரிய பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.