• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிவஞானபுரம் தொடக்கப் பள்ளி வகுப்பறை திறப்பு விழா..,

ByPuthar Pandian P

Mar 10, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 35 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி வரவேற்றார். நிலக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் சுதா, தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் பாலசந்தர், கிராம நிர்வாக அதிகாரி முருகேசன்,ஆசிரியர்கள், உதவி பொறியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.