• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக தலைநகர் டெல்லியில் பரவி வருகிறதாம்.!?

ஜெயலலிதாவால் இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டவர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா,டி.வி.தினகரன், எடப்படி பழனிச்சாமி இடையே ஏற்பட்ட பிளவு நாள் ஒரு வண்ணம் பொழுதொரு வண்ணம் வேறு திசையில் பயணித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில்.ஓபிஎஸ் உடன் இருந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தி.மு.க.வில் சங்கமம் ஆன நிலையில்.

தமிழகத்தில் தேர்தல் மேகம் சூழ்ந்து வரும் நிலையில். எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது,ஒரு தன்னந்தனியாக தமிழக அரசியலில் இவரது நிழல் மட்டுமே உடன் வரும் நிலையில். எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்_யை எந்த சூழ்நிலையிலும் கூட்டணியில் சேர்க்கவே முடியாது என உறுதியாக இருக்கும் நிலையில்.

தீவிர தமிழக அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு எடுத்தாலும். அதிகாரமான பதவியான ஆளுநர் பதவியை பெற்று தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கும் நிலையில்,

பாஜகவின் தலைமை ஓபிஎஸ்யை ஆளுநராக பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், மணிப்பூர் அல்லது மஹாராஷ்டிரா என்ற இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் டெல்லி வட்டராத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இந்த சூழல் எந்த புற்றில் என்ன பாம்பு என்ற பழமொழி மக்கள் மத்தியில் உலா வருகிறது.