• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நாளை தேனியில் கூடைப்பந்தாட்ட போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி

தேனியில் நாளை(டிச.19) கூடைப்பந்தாட்ட போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது.

தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கூடைப்பந்தாட்ட போட்டி அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் வீரர், வீராங்கனைளுக்கான தேர்வு டிச.19ம் தேதி காலை 8 மணிக்கு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஜனவரி 1ம் தேதி 2005க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் தகுந்த சான்றிதழ்களுடன் வந்து பயன்பெறலாம் என, தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக தலைவர் சிதம்பர சூரிய வேலு, செயலாளர் அஸ்வின் நந்தா, பொருளாளர் டாக்டர் பிரபு தெரிவித்தனர்.