தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து, தேனி பங்களாமேட்டில் நேற்று (டிச.17) அ.தி.மு.க., சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் மக்கள் நிற்க முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதியது.
மூச்சு திணறல் மற்றும் வெயில் கொடுமை தாங்காமல் கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் பலரும் கலைந்து சென்றதை காண முடிந்தது.

ஒரே இடத்தில் சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோய் பரப்புதல் உட்பட 4 பிரிவுகளின்படி ஓ.பன்னீர்செல்வம், எம்.பி., ரவீந்திரநாத், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட செயலாளர் சையதுகான், இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட அவைத் தலைவர் பொன்னு பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தேனி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.