• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஜூலை 28 விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Byவிஷா

Jul 23, 2025

ஜூலை 28 ஆடிப்புரத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெறுவதால் அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து 28ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்டு 9ம் தேதியை வேலை நாளாகவும் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.