• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தாயில்பட்டி, கோட்டையூர் பகுதியில் கூடுகட்டி தங்கி உள்ள ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கால் நாரை..,

ByK Kaliraj

Aug 1, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரம்,தாயில்பட்டி, கோட்டையூர், உள்ளிட்ட பகுதியில் இனப் பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கால் நாரை வகையைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் கடந்த நான்கு மாதங்களாக மரங்களில் கூடுகட்டி தங்கி உள்ளன.

உணவுக்காக அருகில் உள்ள கண்மாய்களுக்கு செல்வது வழக்கம். தற்போது கண்மாய்கள் முழுவதும் வற்றி விட்டதால் உணவுக்காக வெம்பக்கோட்டை அணைக்கு நூற்றுக்கணக்கான பறவைகள் வருகை தருகின்றன. அணையில் உள்ள தண்ணீரில் இருந்து நீந்தும் மீன்களை செங்கால் நாரை பறவைகள் அலகுகளில் வைத்து கொண்டு செல்வதை ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

மரங்களில் உள்ள கூடுகளில் தங்களது குஞ்சுகளுக்கும் மீன்களை அலகுகளில் வைத்து மூன்று முதல் நான்கு மீன்களை உயிருடன் கொண்டு செல்லும். அவ்வாறு கொண்டு செல்லும்போது அலகுகளில் வைத்துள்ள மீன்கள் துள்ளி குதித்து தவறி தரையில் விழுந்தாலும் தரையில் விழுந்த மீன்களை மீண்டும் இப் பறவைகள் எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணையில் மீன்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் செங்கால் நரை பறவைகள் மீன்களை பிடிக்கும்போது தொந்தரவு தருவதில்லை.