• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் 5 அடி பனிலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு!

ByM.JEEVANANTHAM

Feb 26, 2025

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் 5அடி உயரத்தில் பனிலிங்கம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவில் பாஜக சார்பில் மகாசிவராத்திரியையொட்டி 5 அடி உயரத்தில் பனிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பனிலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. இதில் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் என திரளான பக்தர்கள் பனிலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.