• Mon. Apr 21st, 2025

சீர்காழி இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

ByM.JEEVANANTHAM

Feb 26, 2025

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீரா பானு(19) மாமியார் சுஜிதா பிவி(60) ஆகியோர் கடந்த 2011 ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் எந்த முன்னேற்றம் அடையாதால் இவ்வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நாகை மாவட்ட சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இக்கொலை வழக்கில் 2018ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், சுரேஷ்குமார், கமல் ஆனந்த் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் சமீரா பானு,சுஜிதா பிவி ,ஆகிய இருவரையும் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது அடுத்து தினேஷ்குமார், சுரேஷ்குமார், கமல் , ஆனந்த் ஆகிய நான்கு பெருகும் ஆயுள் தண்டனையும் தலா 6 ஆயிரம் அபராதம் விதித்தும் அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.