• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

Byவிஷா

Nov 30, 2024

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
“சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். புயல் கரையை கடக்கும்போது ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். கனமழை, புயல் காற்றுக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள், உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள், விளம்பர போர்டுகள் ஆகியவை சாய்ந்தும், விழுந்தும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவற்றை கீழே இறக்கி வைக்க வேண்டும். அல்லது உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் என்று தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளது.