• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை திருநகர் 3-வது பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டி கற்பழித்து கொலை., பிரபல டூவீலர் திருடன் கைது.

ByKalamegam Viswanathan

Aug 10, 2023

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வேடர் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்து பிள்ளை (66) வயது., திருமணம் ஆகாத இவர் திருநகரில் அடிக்கடி யாசகம் பெற்று சாலையில் படுத்து உறங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவரது காதில் அணிந்திருந்த காதனியை மர்ம நபர் ஒருவர் கழட்டி எடுத்துவிட்டு முத்து பிள்ளையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து தப்பியோடியுள்ளார்.

சம்பவம் குறித்து அதிகாலை ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பூக்கடைக்காரர்கள் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும்., திருநகர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநகர் போலீசார் இறந்த மூதாட்டியை அடையாளம் காணப்பட்டு அவரது உறவினருக்கு தகவல் அளித்தனர். மூதாட்டி உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்படுத்தியது.

அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து., காதில் அணிந்திருந்த காதனியை எடுத்துச் சென்றது CCTV கேமராவில் தெள்ளத் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுரை திருநகர் அருகே தன்னக்கன்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் அலெஸ் (பிரபல டூவீலர் திருடன்)., என்பதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து., சில மணி நேரத்தில் குற்றவாளி அலெக்சை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு டூவீலர் திருடியதும் தெரியவந்தது. குற்றவாளியை சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் கடையின் பின்புறம் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து., தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.