• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவையில் நாகசக்தி அம்மன் தியாகபீடத்தில் சத்ரு சம்ஹார பூஜை..,

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாக சக்தி அம்மன் தியாகபீடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. துன்பங்களிலிருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்த பூஜை அங்கு மாலை நேரத்தில் நடத்தப்படுகிறது.

பாபுஜி சுவாமிகள் இந்த பூஜையை மேற்கொண்டார். மனிதர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு நடைபெற்ற இந்த பூஜையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை கூறினால் அம்மன் அருளால் குறைகள் அனைத்தும் நிவர்த்தி அடைந்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.