• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு..,

ByP.Thangapandi

Jul 29, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உசிலம்பட்டி கட்டட பொறியாளர் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,

இதில் தமிழ்நாடு கட்டட பொறியாளர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் அறிவழகன், மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கரன் உள்ளிட்டோர் செல்போன் மற்றும் சமூக வலைதள பயன்பாட்டின் போது சைபர் குற்றங்களில் சிக்காமல் இருப்பது குறித்தும்., சைபர் குற்றங்களை தடுப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினர்.,

கல்லூரியில் பயிலும் நாட்டு நலப்பணிகள் திட்டத்தைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சைபர் குற்றங்கள் குறித்த தங்களின் சந்தேகங்களையும் கேட்டறிந்து பயனடைந்தனர்.,