• Fri. Sep 29th, 2023

அலங்காநல்லூர் அருகே ஒருவர் வெட்டி கொலை…

ByKalamegam Viswanathan

Aug 10, 2023

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பாலன் (45). இவர், அப்பகுதியில் சொந்தமாக கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். மேலும், கடைகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். இவருக்கு, திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கம்பெனியை அடைத்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். வீட்டிற்கு மிக அருகில் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கு மறைந்திருந்த ஒருவர், பாலனை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து ஒடிடி விட்டார்.
இதில், பாலனுக்கு தொடை, கழுத்து, மற்றும் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்துள்ளார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக, அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாலனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *