

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, தமிழக முதல்வர் ஓய்வூதியர்கள் காண தேர்தல் வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றவில்லை. எனவே வாக்குறுதலை நிறைவேற்ற வேண்டும் என்று ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஒன்றிய நகரட்சி, பகுதிகளில தர்ணா போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம்.

சத்துணவு ஓய்வுதியர்களுக்கு 2850க்கு கீழ் வாங்குவோர் அனைவருக்கும் 7850 வழங்க கோரி தனிக்கோரிக்கையை முன்வைத்து இன்று தமிழக முழுவதும் 239 வட்டகிளையிலிருந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.(5.9.2023) அன்று கரூர் மாவட்டத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
அன்று தமிழக அரசின் ஒய்வூதியர் நலனின அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இல்லையென்றால் இதைவிட கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என தீர்மானம் செய்ய உள்ளோம்.
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கும் ஓய்வு பெற்ற ஊராட்சி எழுத்தாளர்களுக்கும் ஊர்ப்புபுற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் வனத்துறை ஊழியர்கள் போன்ற சிறப்பு ஓய்வுதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் 7850 வழங்கிட கோரி தமிழ்நாடு அரசு அனைத்து துறை உதவி ஓய்வூதியர் சங்கம் சார்பாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.