மதுரை மாவட்டம் வாடிப்பட்டி புஷ்பகம் காப்பகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தை களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

இந்தநிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பசுமணியன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் வார்டு செயலாளர்கள் திருப்பதி, அம்பேத்குமார், விக்னேஷ் சௌந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் தங்கப்பாண்டியன், கச்சை ரமேஷ், சோலை ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் ஏற்பாடுகளை ஹரிவிஜயன் செய்திருந்தார்.





