• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!

Byவிஷா

May 29, 2023

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் ஊக்க தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 1330 திருக்குறளை ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண் மற்றும் பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளை கூறும் திறன் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் மற்றும் திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்.