• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

விழுப்புரத்தில் பயங்கரம் -டிராக்டர் மோதி கோர விபத்து 2 பெண்கள் பலி

ByA.Tamilselvan

May 1, 2023

தினக்கூலி வேலைக்கு சென்ற 13 பெண்கள்…டிராக்டர் மோதி கோர விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தினக்கூலி வேலைக்காக 13 பெண்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த 13 பெண்கள் தினக்கூலி வேலைக்காக சொறையப்பட்டு கிராமத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பியுள்ளனர். அப்போது, திருக்கோவிலூர் அருகே மரக்கட்டைகளை ஏற்றி சென்ற டிராக்டர் மீது 13 பெண்களை ஏற்றி சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தின் பக்காவாட்டில் நின்று கொண்டிருந்த சுமதி மற்றும் லட்சுமி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.