• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

ByA.Tamilselvan

Apr 23, 2023

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கடுமையான வெப்பம் வதைத்து வரும் நிலையில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவ்ட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை 24 மற்றும் 25-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.