• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் பல இடங்களில் சதமடித்த வெயில்..,பொதுமக்கள் அவதி..!

Byவிஷா

Apr 18, 2023

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் தொடங்கி பல இடங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தாண்டு கோடைக் காலம் மோசமாக இருக்கும் என்றும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகரித்தே வருகிறது.
கடந்த மார்ச் மாதமே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிய நிலையில் ஏப்ரல் மாதத்திலும் பல இடங்களில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வேலூர், திருப்பத்தூர், மதுரை நகர் பகுதியில் 103. 64 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.