தென்காசி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், வானிலை மாறி இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் காலையிலிருந்து அதிக அளவில் வெயில் இருந்து வந்த நிலையில் இரவு நேரத்தில் கடந்த இரு நாட்களாக இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. மேலும், நள்ளிரவில் பெய்த கனமழை காரணத்தினால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெசவாளர் காலனி மற்றும் இன்னும் சில பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் அல்லல்பட்டனர்.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் இரண்டாவது நாளாக நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதற்கிடையில், அடுத்த ஒரு வாரங்களுக்கு மதியத்திற்கு மேல் மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.