• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் திருச்சிகடி கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அதில் ஊர்த் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார் மற்றும் கிளைத்தலைவர் .ராகவேந்திரன் முன்னிலை வகித்தார். கிழக்கு மண்டல பொது செயலாளர் திருமதி. ரேவதி மேற்பார்வையில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவு நீலகிரி மாவட்டத் தலைவர் .Dr .R.தேவகுமார் சிறப்புரை ஆற்றினார். இதில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் மகளிர் அனைவரும் பங்கேற்று அவர்களின் குறைகள் மற்றும் சந்தேகங்களை கூறினார்கள்.