• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 17 பேர் பலி

ByA.Tamilselvan

Jan 30, 2023

பாகிஸ்தான் பெஷாவரில் இன்று மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலியானதாகவும், 80க்கும் மேற்பட்டேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.