• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நீலகிரி அருகே அட்டகாச குரங்குகளால் வியாபாரிகள் அவதி

எஸ் ஜாகிர் உசேன்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளால் பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி குழந்தைகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


காலை வழக்கம் போல கடைகளை திறந்து கொண்டிருக்கும் போது 30க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒன்றுக்கொன்று ஆக்ரோசமாக சண்டையிட்டு பொதுமக்கள் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் அருகே ஆக்ரோசத்துடன் காணப்பட்டது. ஒன்றுக்கொன்று சண்டை இட்டுக் கொண்டதில் துணிக்கடை காய்கறி கடை பொருட்கள் மீதுஅங்கும் இங்கும் ஓடியதில் பொருட்கள் சிதறியும் துணிகளும் சேதம் அடைந்தது. வீடுகளில் நுழைந்து பொருட்களை திருடுவது குழந்தைகள் முதியவர்களை அச்சுறுத்தியும் நாளுக்கு நாள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளனர்