நீலகிரி மாவட்டம் முழுவதும் கடமையான உறை பனி விழுந்து வருகிறது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு வீட்டு வாசல் முன்பாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் தண்ணீர் துணிகள் மற்ற பொருட்கள் அனைத்தும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக உறைந்து விடுகின்றன .காலை நேரங்களில் தங்களது வாகனங்களை இயக்கும்பொழுது பெட்ரோல் டீசல் ஆயில் போன்றவை உறைந்து இருப்பதால் வாகனங்கள் இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இரவைப் போன்று பகலிலும் கடும் குளிர் நிலவி வருவதால் அனைவரும் சால்வை சொட்டர் தொப்பி அணிந்து கொண்டு வெளியே வருவதை காண முடிகிறது. மஞ்சூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது படிந்துள்ள பனிக்கட்டிகள் குழந்தைகள் கைகளால் எடுத்து விளையாடி வருகின்றனர்.