• Fri. Apr 26th, 2024

எமரால்ட் அணையில் கிடந்த ரேஷன் அரிசி குழி தோண்டி மூடல்

மஞ்சூர் அடுத்த எமரால்ட் சுருங்கி பாலம் பகுதியில் கிடைத்த அரிசி மூடைகள் வட்டாசியர் முன்னிலையில் குழிதோண்டி மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்ட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு மேய்க்கச் சென்றவர்கள் சுருக்கி பாலம் என்ற அணையில் சிறிய மூட்டைகள் கிடைப்பதாக காவல்துறைக்கும் வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவித்தனர் .அணையில் கிடந்த மூட்டைகளை ஒன்று எடுத்து திறந்து பார்த்ததில் ரேஷன் அரிசிகள் காணப்பட்டன. இன்று காலை குந்தா வட்டாட்சியர் இந்திராணி தலைமையில் அணையில் கிடந்த அரிசி மூட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்ததில் 180 க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருந்தன. இதனை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். நீண்ட நாட்களாக தண்ணீரில் ஊறி இருப்பதால் அரிசி மூட்டைகளை எடுத்துச் செல்ல முடியாததால் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய குழிகள் தோண்டி அரிசி மூட்டைகளை மூடி புதைத்தனர். அணையில் கிடந்தது ரேஷன் அரிசியா அல்லது வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டிருந்த ரேஷன் அரிசியா அல்லது கடந்த கொரோனா காலத்தில் கட்டுமான வணங்குவதற்காக இருந்த அரிசியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடன் டி எஸ் ஓ வேடியப்பன் காவலர்கள் வனத்துறையினர் ஆய்வை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *