• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா.. மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு..!

சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரியில், 2014ஆம் ஆண்டு முடித்த மாணவர், மாணவிகளுக்கு 3 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பட்டங்களை வழங்கினார்.


முன்னதாக கொரோனா விழிப்புணர்வு குறித்தும் கொரோனா காலத்தில் மாணவ மாணவியர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினார். பின்னர், 2014 ஆண்டை சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் உட்பட 94 பேருக்கு பாராட்டுச் சான்றுகள் மற்றும் பட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லுரி டீன் ரேவதி துணை முதல்வர் சர்மிளா மற்றும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.