பொள்ளாச்சி அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லாதபோது, அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை அழைத்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
அச்சிறுமி கூச்சலிட்டவாறு நிரஞ்சனிடமிருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அச்சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிரஞ்சனை கைது செய்தனர்.