67வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. திரைத்துறையின் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் நடந்த இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ‘அசுரன்’ திரைப்படத்திற்கும், அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பெற்றுக்கொண்டனர்.

அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ‘அசுரன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பெற்றுக்கொண்டனர்.
சூப்பர் டீலக்ஸ் பத்தில் ஷில்பா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு, சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான “ஒத்த செருப்பு” படத்திற்கு “சிறப்பு நடுவர் தேர்வு விருது” வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே..” பாடலுக்காக டி.இமானுக்கு வழங்கப்பட்டது.