தமிழகம் முழுவது 56 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ளப்பட்டுள்ள அறிக்கையில்,
ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாகவும், தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடே டிஜிபி யாகவும், திருச்சி எஸ்.பி வருண்குமார் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன் டிஜிபியாகவும், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்படடுள்ளது.
மேலும் 12 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ராணிப்பேட்டை – விவேகானந்தா சுக்லா, விழுப்புரம் – பி.சரவணன்,
கடலூர் – எஸ்.ஜெயக்குமார், அரியலூர் – தீபக் சிவாச், தஞ்சாவூர் – ஆர்.ராஜாராம், திருவாரூர் – கரத் கருண் உத்தவ்ராவ், திருச்சி – எஸ்.செல்வநாகரத்தினம், புதுக்கோட்டை – அபிஷேக் குப்தா, திருப்பூர் – யாதவ் கிரிஷ் அஷோக், சிவகங்கை – ஆஷிஷ் ராவத், தென்காசி – எஸ்.அரவிந்த், கன்னியாகுமரி –ஆர்.ஸ்டாலின் ஆகியோர் எஸ்.பிக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்த சரோஜ் குமார் காவல்துறை தலைமையக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் கிழக்கு இணை ஆணையராகவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பியாகவும், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை தெற்கு, துணை ஆணையர் சரவணக்குமார் பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பியாக சென்னை தென்மண்டலத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் ஹடிமனி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை துணை ஆணையர் ஜெயச்சந்திரன், திருவல்லிக்கேனி துணை ஆணையராக
ஆவடி துணை ஆணையர் அன்பு ஈரோடு சிறப்பு படை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.