• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

குடியரசு தலைவரிடம் விருது பெற்ற மீனாட்சி சுந்தரம்- திற்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த விவசாயிகள்..,

ByP.Thangapandi

Jun 25, 2026

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், பயங்கரவாத தாக்குதலின் போது குண்டு பாய்ந்தும் அவர்களுடன் தாக்குதல் நடத்தி நாட்டுக்காக போராடினார். இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கீர்த்தி சக்ரா விருது வழங்கி கௌரவித்தார்.,

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறவினரான உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் -கடல்முத்து ஆகியோரின் திருமண விழா நடைபெற்றது., இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.,

அதனைத் தொடர்ந்து 58 கிராம பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள்ன மற்றும் பலர் பொன்னாடை, மாலை அணிவித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.,

மேலும் திருமணத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.,