• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கை,கால்கள் கட்டுபட்டு 55 வயது பெண் கொலை

ByKalamegam Viswanathan

Jun 12, 2023

திருப்பரங்குன்றம் அருகே நாகமலை புதுக்கோட்டையில் 55 வயது பெண் கொலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.கை, கால்கள் சேலையில் கட்டப்பட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் வாய்கால் அருகே கை கால்கள் கட்டிய நிலையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக இருப்பது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கை, கால்கள் கட்டிய நிலையில் கிடந்த பெண் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த பெண் எந்த ஊர் எவ்வாறு சம்பவ இடத்திற்கு வந்தார் கற்பழிப்பு சம்பவம் எதுவும் நடைபெற்றதா என போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.