• Sat. Sep 30th, 2023

மதுரை அருகே கார் விபத்தில் வருவாய் அதிகாரி பலி

ByKalamegam Viswanathan

Jun 12, 2023

மதுரை வாடிப்பட்டி அருகே கார் விபத்தில் வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர் பலி
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 73) இவர் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று தனது தங்கை சுகஜோதி (70) என்பவருடன் மதுரையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூருக்கு புறப்பட்டார்.

இன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி கட்டக்குளம் பிரிவு முன்புவந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் தடிப்பில் மோதி தலைக்கு புற உருண்டு கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்தில் மோகனசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த சுகஜோதி வாடிப்பட்டி அரசுமருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ள்ளார்.இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப் இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *