• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

ஐந்தாம் வகுப்பு மாணவன் தூக்கில் தொங்கிய பரிதாபம்

ByKalamegam Viswanathan

Jun 12, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவன் தூக்கில் தொங்கிய பரிதாபம் காடுபட்டி போலீஸார் விசாரணை
மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் வயது 45 இவர்மரம் வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார் இவரது மகன் சண்முகவேல் அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு பின்புறம் உள்ள பாத்ரூமில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிறுவனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதனால் சண்முகவேல் உடலை பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது இதனை அடுத்து சண்முகவேலின் உடல் உடற்கூறு ஆராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இது குறித்து காடுபட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.