பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட மறு ஆண்டிலேயே ‘செக்யுயா கேபிடல்’, ‘ஸோபினா’ஆகிய இரு நிறுவனங்கள் 75 மில்லியன் டாலர் அளவில் பைஜுஸில் முதலீடு செய்கின்றன! இதனைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் அமைப்பான ‘சான் ஸூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்’ (chan zuckerberg initiative) பைஜுஸில் 50 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்தபோது இவ்வுலகின் பார்வை பைஜூஸ் நோக்கி திரும்பியது..
தற்போது, ‘சில்வேர் லேக்’, ‘பாண்ட்’, ‘பிளாக் ராக்’, ‘சேண்ட் கேபிடல்’, ‘டென்சென்ட்’, ‘ஜெனரல் அட்லான்டிக்’, ‘டைகர் குளோபல்’ என இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் பைஜுஸில் முதலீடு செய்துள்ளன.
கொரோனாவுக்குப் பிறகு இந்தியக் கல்வித் துறையே ஆன்லைனை நோக்கிய நகரலானது, பைஜுஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பைஜுஸ் நிறுவனம் வருவாய் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
நன்றாகத்தானே இருக்கிறது, திறமை கொண்ட சாமானியர் ஒருவர் கல்வித் துறையில் உச்சம் தொட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்று அனைவருக்கும் தோணலாம்..
ஆம், தன் திறமையை மூலதனமாகக் கொண்டு ரவீந்திரன் எட்டிய வளர்ச்சி உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றுதான்.