• Fri. Apr 26th, 2024

முக கவசம் இல்லையெனில் அபராதம்; சேலம் ஆட்சியர்  எச்சரிக்கை….

தமிழகம் முழுவதும் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் ஐந்து ரோடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொரொனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் .

அப்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி முக கவசம் அணிவித்தார் தொடர்ந்து பேருந்தில் ஏறிய ஆட்சியர் சமூக இடைவெளியோடு அமரவும் முக கவசம் அணியவும் அறிவுரை வழங்கினார் மேலும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்பதை கடை உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் கிருமி நாசினி உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

மேலும் நாளை முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டும் பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும் எனவும் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *