சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு வண்டலூர் நோக்கிச் சென்ற கார் ஒன்று தனது கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர் . மேலும்,விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.