• Wed. Dec 11th, 2024

ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்தநாள் விழா!.. அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில், மாவட்ட கவுன்சிலர் ஜிகே பாண்டியன் முன்னிலையில் திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் ஆண்டிபட்டி சேர்மனும், மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் நிர்வாகிகள் உடன் வந்து மாலை மரியாதை செய்தனர் .

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஒன்றியச் செயலாளர் தவச்செல்வம் ஒன்றிய துணைச் செயலாளர் அய்யணன் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது .இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம் செல்வம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்க ராஜ் முன்னிலையில் நிர்வாகிகள் மனோஜ்குமார், பகவதி ராஜ்குமார் , பாண்டி முனீஸ், முருகேசன், பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி எஸ் கே. ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது .உடன் நிர்வாகி ரத்தினவேல் உட்பட பலர் உடனிருந்தனர். தேமுதிக சார்பில் நகர செயலாளர் பாலாஜி நிர்வாகிகளுடன் வந்து திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆண்டிபட்டி வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் பாண்டியராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .ஆண்டிபட்டி மாலை கோவில் வளாகத்தில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் நிர்வாகிகள் பலர் வந்திருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஏற்பாடுகளை ஆண்டிபட்டி வட்டார நாயுடு ,நாயக்கர் சமுதாய சங்கத்தினர் செய்திருந்தனர்.