60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது 4.42 லட்சம் பேர் தகுதி உடையவர்களாக உள்ளனர் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.